இலங்கை செய்திகள்

பாதுகாப்பு பிரதானிகளை கைது செய்ய முடியாது - ஜனாதிபதி மைத்திரி

14 Sep 2018

பாதுகாப்பு பிரதானிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாயின் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்வதே உசிதமானது எனவும், மாறாக அவர்களைக் கைது செய்து அழுத்தங்களுக்கு உட்படுத்தக் கூடாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் கூறியுள்ளார்.

இராணுவத் தளபதிகளை தேவையற்ற முறையில் கைது செய்ய முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி தனது அதிருப்தியையும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட்டுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்