இலங்கை செய்திகள்

பாடசாலை விடுமுறை நாட்கள் குறைக்கப்படும்

25 Nov 2022

அடுத்த ஆண்டில் பாடசாலை  விடுமுறை நாட்களை குறைத்து, அந்த வருடத்திற்குள்ளேயே பாடத்திட்டங்களை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

திட்டமிட்டவாறு இந்த ஆண்டு இறுதிக்குள்  பாடத்திட்டங்களை நிறைவு செய்யவே தீர்மானித்திருந்த போதிலும், உயர்தரப் பரீட்சையை ஜனவரிக்கு ஒத்தி வைக்க நேரிட்டதால், தவணைகள் தள்ளிப் போயுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை குறைப்பது தொடர்பில்  அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam