இலங்கை செய்திகள்

பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் முடிவு வேண்டும்

13 Oct 2021

ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதிக்கு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அனைவரும் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுபோதனி குழுவின் அறிக்கை வர வேண்டும் எனவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளை ஆரம்பிக்க இன்னும் 7 நாட்கள் இருப்பதால் கலந்துரையாடி உடனடியாக முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam