இலங்கை செய்திகள்

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

26 May 2023

நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (26) முதல் அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதால் இவ்வாறு இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam