சினிமா செய்திகள்

பாடகி ஆனார் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா

12 Aug 2019

சசிகலா வழக்கில் சிறையில் நடந்த விவகாரங்களை வெளியே கொண்டு வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா. இவர் திடீரென சினிமாவுக்கு வந்துள்ளார். நடிக்க வரவில்லை. பாடகியாக அறிமுகமாகியுள்ளார். டிவி நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடுவதை பார்த்து பேயலதாதா பீமண்ணா கன்னட பட குழுவினர் இவரை பாட அழைத்தனர். அதன்பேரில் இந்த படத்துக்காக ஒரு பாடலை சமீபத்தில் ரூபா பாடினார்.

 
இதுகுறித்து ரூபா கூறியதாவது:- ‘இது டூயட் பாடல் கிடையாது. இந்துஸ்தானி இசையை நான் கற்றிருக்கிறேன். அந்த அனுபவத்திலேயே பாடினேன். இப்பாடலுக்காக ஒருவாரம் பயிற்சி எடுத்து பாடினேன். ஜானகி, லதா மங்கேஸ்கர், வாணி ஜெயராம் ஆகியோரது பாடல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது.’ என்றார் ரூபா.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்