இந்தியா செய்திகள்

பாக். ராணுவ தாக்குதலில் இந்திய வீரர் 2 பேர் பலி

13 Aug 2017

காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் தொடுத்து வரும் பாகிஸ்தான் ராணுவம், அவ்வப்போது கிராம பகுதிகளிலும் அத்துமீறிய தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இதுபோன்ற ஒரு தாக்குதலை நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் நிகழ்த்தியது.

காஷ்மீர் எல்லையை ஒட்டியுள்ள பூஞ்ச் மாவட்டத்தின் பூஞ்ச் செக்டாரில் அதிகாலை 5.15 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் இந்த கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது. தானியங்கி ஆயுதங்கள், சிறிய ரக பீரங்கிகள் போன்ற ஆயுதங்களால் நடத்தப்பட்ட இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு எல்லையோர கிராமப்பகுதிகள் இலக்காகின.

இதில் கோலாத் கல்லரியன் கிராமத்தை சேர்ந்த முகமது சபிர் என்பவரின் வீட்டில் பீரங்கி குண்டுகள் விழுந்து வெடித்தன. இதில் சபிரின் மனைவி ராகியா பீ (வயது 40) சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் கடுமையான பதிலடி கொடுத்தனர். இதனால் எல்லைப்பகுதியில் இருதரப்புக்கும் இடையே சுமார் 1½ மணி நேரம் சண்டை நீடித்தது.

பின்னர் மாலை 5 மணி அளவில் அதே மாவட்டத்தில் கிருஷ்ணா காட்டி பகுதியில் எல்லையையொட்டி அமைந்துள்ள இந்திய ராணுவ நிலைகளை நோக்கி, பாகிஸ்தான் சிப்பாய்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். உடனே இந்திய வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்தினார்கள்.

பாகிஸ்தான் சிப்பாய்கள் நடத்திய தாக்குதலில் ஜக்ராம் சிங் தோமர் (42) என்ற ராணுவ வீரர் பலத்த காயம் அடைந்து உயிர் இழந்தார். இவர் மத்தியபிரதேச மாநிலம் மோரனா மாவட்டத்தில் உள்ள தர்சானா என்ற கிராமத்தைத் சேர்ந்தவர். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV