உலகம் செய்திகள்

பாக். உளவுத்துறை தலைவராக ஆசிம் முனீர் நியமனம்

11 Oct 2018

பாகிஸ்தானில் அதிகாரமிக்க உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) தலைவராக பதவி வகித்து வந்தவர், லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தார். இவர் கடந்த 1-ந் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவரது இடத்துக்கு இம்ரான்கான் அரசு யாரை நியமிக்கப்போகிறது என்ற பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், பாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பாக ராணுவ உளவுப்பிரிவில் தலைவராக பணியாற்றி வந்தார். சமீபத்தில்தான் இவருக்கு லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்தை ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா தலைமையிலான ராணுவ பதவி உயர்வு வாரியம் வழங்கியது.

இந்த நிலையில்தான் ஆசிம் முனீர், உளவுத்துறை தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இவர் வடக்கு பிராந்திய ராணுவ தளபதி பதவியிலும் இருந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இவருக்கு ‘ஹிலால் இ இம்தியாஸ்’ என்ற பாகிஸ்தானின் இரண்டாவது உயர்ந்த தேசிய விருது வழங்கப்பட்டது.
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்