உலகம் செய்திகள்

பாகிஸ்தான் இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீபின் மனைவி மனு தாக்கல்

12 Aug 2017

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் பனாமாகேட் ஊழல் காரணமாக சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து காலியாக உள்ள அவரது என்.ஏ–120 தொகுதியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்–ஷெரீப் கட்சியின் வேட்பாளராக அவரது தம்பி ஷாபாஸ் ஷெரீப் போட்டியிடுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.

இப்போது நவாஸ் ஷெரீபின் மனைவி குல்சூம் ஷெரீப் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். குல்சூம் சார்பில் கட்சி உறுப்பினர்கள் ஆசிப் கிர்மானி, கேப்டன் சப்தர் ஆகியோர் தேர்தல் கமி‌ஷனில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த நடவடிக்கை மூலம் நவாஸ் ஷெரீப் மீண்டும் அடுத்த மாதம் பிரதமரின் கணவராக பிரதமர் இல்லத்தில் நுழைய இருக்கிறார் என்று அவரது குடும்பத்துக்கு நெருக்கமான மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV