உலகம் செய்திகள்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு, 20 பேர் பலி

24 Jul 2017

பாகிஸ்தானின் லாகூரில் பிரதமர் நவாஸ் செரீப் தம்பி, பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி ஷெபாஸ் ஷெரீப் வீடு மற்றும் அலுவலகம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து உள்ளது.  போலீசை குறிவைத்தே இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பில் போலீசார் உள்பட 20 பேர் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போலீஸ் மற்றும் லாகூர் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் அர்பா காரிம் டவருக்கு வெளியே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது இந்த குண்டுவெடிப்பு நடந்து உள்ளது. காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். லாகூர் சிட்டி மருத்துவமனைகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் நிலையானது மோசமாக உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஷெபாஸ் ஷெரீப் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்த போது வெடிகுண்டு வெடித்து உள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு கூறவில்லை.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது வழக்கமான ஒன்றாகவிட்டது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பழங்குடியின பகுதிகளிலே இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறும். இப்போது லாகூரும் அடிக்கடி பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகும் இடமாகி உள்ளது. பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சமையல் செய்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படுவது கிடையாது மாறாக வெடிகுண்டு தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV