இலங்கை செய்திகள்

பஸ் விபத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களான 8 யுவதிகள் படுகாயம்

12 Jul 2018

கொக்கல ஏற்றுமதி வலயத்திலுள்ள ஆடைத்  தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பஸ் ஒன்று, இன்று காலை ஹபராதுவ- ஹெடிவத்த பகுதியில் வைத்து வீதியை விட்டு  விலகி தென்னை மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 8 பெண்கள், ஹபராதுவ- கலுகல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதனால் அவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்