இந்தியா செய்திகள்

பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் 5-வது நாளாக நீடிப்பு

10 Oct 2019


தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து கழகத்தை அரசுடைமையாக்க வலியுறுத்தி பஸ் ஊழியர்கள் நேற்று 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் ஐதராபாத்தில் அலுவலகத்திற்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மூலமாக குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் அரசால் முழுமையாக போக்குவரத்து வசதி செய்து தர முடியவில்லை. இதன் காரணமாக தெலுங்கானா முழுவதும் மக்கள் சிரமப்பட்டனர்.

இதற்கிடையே அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தேவைப்பட்டால் மக்கள் ஆதரவோடு மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்துவோம் என்று சங்கத்தலைவர் அஸ்தவதாமா ரெட்டி தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்