இலங்கை செய்திகள்

பளையில் வெடி விபத்து : ஒருவர் காயம்

09 Jan 2018

கிளிநொச்சி பளை பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பளை பகுதியை சேர்ந்த சிவமூர்த்தி சுரேந்திரன் (வயது 38) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

குறித்த நபர் மிதிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவர் எனவும் , அவர் வெடிபொருள் ஒன்றினை பிரித்து வெடி மருந்தினை அகற்ற முற்பட்டபோது குறித்த வெடிபொருள் வெடித்ததால் அவர் படுகாயமடைந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV