இலங்கை செய்திகள்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை

15 Apr 2018

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ, தென், மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாகாட்டத்திலும் சில இடங்களில் ஏறத்தாழ 100மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV