இலங்கை செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

11 Jan 2019

2018ம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. 

எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்தார். 

விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும். இதற்குரிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேட்டை இன்று முதல்  முகவர் புத்தகக் கடைகளில் விலைக்கு வாங்கலாம் என்றும் அவர் கூறினார். 

இம்முறை 31 ஆயிரத்து 158 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட உள்ளனர். இதன்படி கடந்த ஆண்டை விட ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கின்றனர். 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்