இலங்கை செய்திகள்

பல்­க­லைக்க­ழக மாண­வர்­க­ளு­டன் இணைந்து நினைவுகூர்வோம் - அரச பொது ஊழி­யர் சங்­கம்

16 May 2018

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் க­ழக மாண­வர்­க­ளு­டன் இணைந்து முள்­ளி­வாய்க்கால் நினைவு நாளை முள்­ளி­வாய்க்­கா­லில் மே 18ஆம் திகதி  அரச பொது ஊழி­யர் சங்­கம் நினைவு கூரவுள்ளது என்று சங்­கத்­தின் தலை­வர் எஸ்.லோக­நா­தன் தெரி­வித்­தார். இது தொடர்­பாக அவர் இன்று ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்கையில்-

“2009 மே 18ஆம் திகதி என்­பது தமி­ழர்­கள் வாழ்­வில் என்­றுமே நினை­வில் இருந்து நீங்­காத ஒரு நாள். அன்­றைய நாள் தமி­ழர்­க­ளு­டைய வாழ்க்கை வர­லாற்றை புரட்­டிப்­போட்ட நாள். அன்­றைய பொழுது இன்­றும் விடி­யா­த­படி எத்­த­னையோ தமி­ழர்­கள் இன்­றும் சுய­நி­னை­வின்றி தவிக்­கின்­ற­னர். இதனை நினைவு கூரவேண்­டி­யது தமி­ழர்­க­ளா­கிய எங்­கள் ஒவ்­வொ­ரு­வ­
ரு­டைய கட­மை­யு­மா­கும்.

எமது போராட்­டங்­கள் அனைத்­தும், தமிழ் மக்­கள் இணைந்த வட, ­கி­ழக்­கில் ஒரு நிலை­யான தீர்ப்வை பெற­வேண்­டும் என்­பதே. அதற்­கா­க ­வேண்டி அகிம்சை வழி­யி­லும், ஆயு­த­ வ­ழி­யி­லும் தமி­ழர்­க­ளு­டைய போராட்­டங்­கள் நடை­பெற்­றன. அந்த இரண்டு வழிப்­ போ­ராட்­டங்­கள் மூல­மும் நாம் பெரும்­பான்மை சமூ­கத்­தி­டம் இருந்து பெற்­றுக்­கொண்­டது தமிழர்களின் இழப்பே.

முள்­ளி­வாய்க்­கா­லில் உயிர்நீத்த உற­வு­க­ளின் நினைவு நாளை வட­மா­காண சபை நினை­வு­கூர்­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­வ­தாக அறி­யும் அதே நேரம் சமூக நோக்­கம் கொண்ட யாழ்ப்பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளும் அதனை நினை­வு­கூர்வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்து வரு­கின்­றார்­கள்.

அதனை கருத்­தில் கொண்டு எமது அமைப்­பா­னது யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளு­டன் இணைந்து இந்த முறை முள்­ளி­வாய்க்­கால் நினைவு நாளை கடைப்­பி­டிப்­ப­தற்­கான ஏற்பாடு களைச் செய்து வருகின்றது” எனக் கூறினார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்