இந்தியா செய்திகள்

பலாத்காரம் எதிர்த்து போராடிய பெண் கொலை

31 Oct 2017

ஷாமிலி மாவட்டத்தில் உள்ள பவுரா கிராமத்தில் ஒரு பெண்ணை   4 பேர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர். அந்த பெண் அவர்களிடம் எதிர்த்து போராடி உள்ளார். அவர்களை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் பெண்ணை சரமாரியாக தாக்கி உள்ளனர். அதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து பெண்ணின் சகோதரர் போலீசில் புகார் செய்து உள்ளார்.

இது போல்  மீரட் மாவட்டத்தில் ஜனி கிராமத்தில் 100 வயது முதிய பெண் ஒருவரை குடிபோதையில் இருந்த 24 வயது வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இந்த நிலையில் அந்த முதிய பெண்  பலியானார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்