இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

15 Apr 2019

வடமராட்சி, பருத்தித்துறையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையாராகிய 2ஆம் குறுக்குத் தெரு பருத்தித்துறையைச் சேர்ந்த ம.புவிகரன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையில் இருந்து நெல்லியடி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது மின் கம்பத்துடன் மோதி அவர் விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இதன்போது விபத்துக்கு உள்ளாகியவரை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகிலிருந்தவர்கள் கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது உடல் குடும்பத்தினர் கையளிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விபத்து குறித்து பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்