இலங்கை செய்திகள்

பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் இன்று தீர்மானம்

15 Sep 2021

க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று (15)  தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று வரையில் அதிபர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் அதிபர் – ஆசிரியர்களினால் முன்னெடுப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இதுவரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பான தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam