கனடா செய்திகள்

பனிமலை சரிவில் சிக்கி இரண்டு சகோதரர்கள் பலி

25 Jan 2023

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பனிமலை சரிவில் சிக்கி இரண்டு சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஹெலி ஸ்கீங் (heli-skiing) அதாவது ஹெலிகொப்டர் மூலம் பனிமலை உச்சிக்கு சென்று அங்கிருந்து ஸ்கீங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த வேளை, பனிமலைச் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சகோதரர்கள் இருவரும் பென்சில்வினியாவில் பிரபல வர்த்தகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திமோத்தி கின்ஸ்லி மற்றும் ஜொனதன் கின்ஸ்லி ஆகியோர் ஸ்கீங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது திடீரென பனிப்பாறைகள் சரிந்ததில் இரண்டு சகோதர்ர்களும், அவர்களது வழிகாட்டியும் அதில் சிக்கி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் சிக்கிய மூவரும் விமானம் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், கின்ஸ்லி சகோதரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் பனிமலை சரிவு சம்பவங்கள் இடம்பெறும் சாத்தியங்கள் வெகுவாக காணப்படுவதாகவும், மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam