இந்தியா செய்திகள்

பனிப்பொழிவில் சிக்கிய 150 சுற்றுலா பயணிகள் மீட்பு

12 Jan 2019

சிக்கிம் மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான லசாங் பள்ளத்தாக்கு பகுதிக்கு 11 குழந்தைகள், 34 பெண்கள் உள்பட 150 பேர் சுற்றுலா சென்றனர். அப்போது அவர்கள் கடும் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அனைவரும் 4 மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராணுவ முகாம்களில் அனைவருக்கும் முதலுதவி மற்றும் உணவு வழங்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் சென்ற 43 வாகனங்களில், 23 வாகனங்கள் மீட்கப்பட்டன.

கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி சிக்கிமில் உள்ள நாதுலா பகுதியில் கடும் பனிப்பொழிவில் சிக்கிய 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் ராணுவத்தினரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்