உலகம் செய்திகள்

பனாமாகேட் ஊழல் வழக்கில் பாக்., பிரதமரின் சகோதரரிடம் விசாரணை

18 Jun 2017

பாகிஸ்தானில் பனாமா கேட் ஊழல் தொடர்பாக கூட்டு விசாரணைக்குழு முன் பிரதமரின் சகோதரர் இன்று(ஜூன்-17) ஆஜரானார்.

பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பிரபலங்கள், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் ரகசிய முதலீடுகளும், பணம் பதுக்கி வைக்கப்பட்டு ஊழல் செய்வதற்கு பெயரே இது 'பனாமா கேட்' ஊழல் என்று அழைக்கப்படுகிறது. இன்று நடந்த விசாரணையில்,பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெ ரீப்பின் இளைய சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷெபாஸ் ஷெரீப் ஆஜரானார். அவருடன் அவரது மகன் ஹம்சா ஷெபாஸ், உள்துறை அமைச்சர் சவுதாரி நிசார், நிதியமைச்சர் ஈசாக் தர் ஆகியோரும் கூட்டு புலனாய்வுக்குழு அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

பனாமாகேட் ஊழல் தொடர்பாக என்னிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி, விவரங்களை பதிவு செய்தனர். வழக்கு தொடர்பாக அதிகாரிகள் கேட்ட அனைத்து விவரங்களையும் அளித்துள்ளேன். மேலும், துப்பாக்கி முனையில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவ ஆட்சியாளர்கள் போன்று அல்லாமல் எங்கள் குடும்பம் சட்டத்திற்கு மதிப்பு அளிக்கிறது என்பதை நாங்கள் நிரூபித்து இருக்கிறோம் என்றார்.

முன்னதாக, இந்த ஊழலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் சிக்கியுள்ளனர். கடந்த மாதம் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகன்களான உசைன், ஹசன் ஆகியோரிடம் விசாரைண நடந்தது. சமீபத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அழைத்து விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்