இந்தியா செய்திகள்

பத்திரிக்கையாளர் மீது ரெயில்வே போலீசார் தாக்குதல்

12 Jun 2019

உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டத்தில் சரக்கு ரெயில் ஒன்று  தடம்புரண்டு கவிழ்ந்துள்ளது. இதுதொடர்பாக செய்தி சேகரிக்க நியூஸ்24 செய்தியாளர் அமித்ஷர்மா அங்கு சென்றார். அப்போது அங்கிருந்த ரெயில்வே போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ரெயில்வே போலீஸ் அதிகாரி ராகேஷ் உபாத்யா, கான்ஸ்டபிள் சஞ்சய் பன்வார் உள்ளிட்டோர் அமித் ஷர்மாவை கொடூரமாக தாக்கியுள்ளனர். புகைப்படம் எடுக்க முயற்சி செய்தமைக்காக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமித் ஷர்மாவை கைது செய்த போலீசார் ஜிஆர்பி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அமித் ஷர்மாவை அடித்து உதைத்துள்ளனர். அவரின் ஆடைகளை களைந்து அடித்துள்ளனர். இதுதொடர்பான செய்தி  பரவியதும் பிற செய்தியாளர்கள் அங்கு குவிந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட போலீசார் அனைவரும் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ரெயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிற செய்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்