இலங்கை செய்திகள்

பதவி விலகிய முஸ்லிம் உறுப்பினர்கள் மகாநாயக்க தேரர்களுடன் சந்திப்பு

11 Jun 2019

அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்த  முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று கண்டியில் நடைபெற்றது.

தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகள் உள்ளிட்ட பலதரப்பட்ட விடையங்கள் தொடர்பில் இன்றைய சந்திப்பின்போது மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாகப் பதவி விலகியதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், குற்றம் சுமத்தப்படாதவர்கள் தமது பதவிகளை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறும் மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்