இலங்கை செய்திகள்

பணம் அச்சிடல் இவ்வருடம் குறைந்தது

25 Nov 2022

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பணம் அச்சிடுவது பெருமளவு குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நிதிச் சபையின் கொள்கைகள் தொடர்பான தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றைய தினம் (24) அவர்  இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வருடம் 341 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர், இந்த வருடம் ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் 47 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam