இலங்கை செய்திகள்

படையினரால் மக்களும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டனர்!

10 Feb 2019

முல்லைத்தீவில் பொது குழாய் கிணறு ஒன்றில் இருந்து படையினர் நீரை எடுக்கச் சென்றதால் மக்களுக்கும் படையினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதோடு அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணிப் பகுதியில்  இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக நாள்தோறும் இருபதிற்கு மேற்பட்ட தண்ணீர் பௌசர்களில் படையினர் நீரினை எடுத்துச் செல்வதால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதனால் இன்று காலை குறித்த பகுதிக்கு மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் சென்று படையினரை நீர் எடுக்கவேண்டாம் என்று சொன்னபோது படையினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. 

இங்கு செய்தி சேகரிப்பிற்காகச் சென்ற ஊடகவியலாளர்களை படையினர் ஒளிப்படம் எடுத்துள்ளதுடன் ஊடகவியலாளர்  செல்வராசா சுமந்தன் என்பவரது கமராவினை பறிக்க முற்பட்டதோடு இராணுவம் மற்றும் இராணுவ அதிகாரிகள் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்தனர்.

மக்கள் எமக்கு எதுவும் முறையிடவில்லை ஊடகவியலாளர்கள் நீங்கள் தான் பிரச்சினையை ஏற்படுத்துகிண்றீர்கள்  என படையினர் ஊடகவியலாளர்களை பார்த்து கடும் தொனியில் எச்சரித்தனர்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்