இலங்கை செய்திகள்

படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக துக்க தினம்

25 Nov 2021

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கும் வகையில், சிவில் சமூகம் இணைந்து கடைகள், பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, வெள்ளை நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டு, கிண்ணியாவில் இன்று (25) துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதன்போது, பிரதான வீதிகள், கடைகள், அரச திணைக்களங்கள், வங்கிகள், வணக்கத் தளங்கள் மற்றும் வீடுகள் என பல இடங்களிலும்  வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டன.

உயிரிழந்த நான்கு மாணவர்கள் உட்பட 6 உயிரிழப்புக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை மக்கள் தெரிவித்துள்ளனர்.

முள்ளிப்பொத்தானை கோட்ட பாடசாலைகளிலும் பாடசாலை இடம்பெறாமல் வெள்ளைக் கொடி பறக்கவிடப்பட்டு, இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam