14 Sep 2023
கனடாவின் நியூ பவுண்ட்லாந்து பிராந்தியத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த படகில் பயணித்த மற்றும் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மீன்பிடி படகு ஒன்றே இவ்வாறு நீரில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
சிறியதொரு கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் உள்ளூர் தேவாலயத்தில் குழுமி தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
படகு விபத்து இடம்பெற்ற பகுதியில் உலங்கு வானூர்திகள் மூலம் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.