இந்தியா செய்திகள்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கூடுதலாக ரூ. 942 கோடி மோசடி

13 Mar 2018

மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷி நாட்டின் 2–வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் வாங்கிய ரூ.12,500 கோடி வரையிலான கடனை திரும்ப செலுத்தவில்லை. இந்த ஊழல் அம்பலத்துக்கு வருவதற்கு முன்பே அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரித்து வருகிறது.

இதுதொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் அதிர்ச்சி தகவலாக கூடுதலாக ரூ.942 கோடி மோசடி நடைபெற்று உள்ளது தொடர்பாக வங்கி புகார் தெரிவித்து உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதனையடுத்து மோசடி தொகையானது ரூ. 13,570 கோடியை ஏட்டிஉள்ளது. மெகுல் சோக்‌ஷி நிறுவனம் ரூ.942 கோடி கடன் மோசடி செய்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் தெரிவித்து உள்ளது.

 

 

 

 

 

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்