இந்தியா செய்திகள்

பஞ்சாப்பில் தேர்தலில் இடஒதுக்கீடு கேட்டு திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

12 Jan 2018

கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பல்வேறு துறைகளில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பஞ்சாப்பின் லூதியானா நகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.

வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்த திருநங்கைகள், இதில் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், திருநங்கைகளை மாநகராட்சி உதவி கமிஷனர் அழைத்து பேசினார். கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

இதுகுறித்து திருநங்கைகள் கூறுகையில், ‘‘தேர்தலில் போட்டியிடும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் மாநில அரசு இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’’ என்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV