கனடா செய்திகள்

நோர்த் யோர்க் பகுதி மாடிக் குடியிருப்பில் தீப் பரவல்

16 May 2018

நோர்த் யோர்க் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் நேற்று அதிகாலை வேளையில் தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Yonge Street மற்றும் Finch Avenue பகுதியில் உள்ள குறித்த அந்த கட்டிடத்தில் இடம்பெற்ற அந்த சம்பவத்தில் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளான ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், தீயணைப்பு படையினர் மற்றும் அவசர மருத்துவப் பிரிவினர், குறித்த அந்த நபரை வீட்டின் படுக்கை அறை ஒன்றிலிருந்து மீட்ட நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்காலிக முகாம் அமைக்க உதவும் சாதனம் (propane gas heater) ஒன்றினை பரீட்சித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார், இந்த தீப்பரவல் சம்பவம் சந்தேகத்திற்கிடமானதாக தோன்றவில்லை என்றும் கூறியுள்ளனர்.

பொலிசார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்