கனடா செய்திகள்

நோவா ஸ்கொட்ஷியாவின் கோல் ஹார்பர் பகுதியில் காட்டுத் தீ

13 Jun 2018

நோவா ஸ்கொட்ஷியாவின் கோல் ஹார்பர் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இரவு வேளையில் காட்டுத்தீப் பரவல் தீவிரமடைந்ததை அடுத்து முற்பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

சுமார் எட்டு ஹெக்டேயர் பரப்பளவுக்க காட்டுத்தீ பரவியதை அடுத்து, வீடு வீடாகச் சென்ற கனேடிய மத்திய காவல்துறையினர், மக்களை உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறான உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.

ஹலிஃபெக்ஸ் பிராந்திய எல்லைக்குள் மாத்திரம் இவ்வாறு சுமார் 100 வீடுகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த பகுதி முழுவதும் அதிகாரிகள் இரவிரவாக சுற்றுக் காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்தப் பகுதியில் ஹலிஃபெக்ஸ் தீயணைப்பு படையைச் சேர்ந்த சுமார் 65 தீயணைப்பு படை வீரர்கள்  தீப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடடிவ்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்