கனடா செய்திகள்

நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்

12 Jun 2018

நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Driftwood Avenue மற்றும் Jane Street பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அங்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்