இலங்கை செய்திகள்

நேற்று நள்ளிரவுடன் எரிபொருள் விலை அதிகரிப்பு

14 Aug 2019

நேற்று 13ம் திகதி  நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 
இதன்படி ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவாலும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

எனினும், ஒட்டோ டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில் விலைச் சூத்திரத்திற்கு அமைய ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 138 ரூபாவிற்கும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 163 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும். மேலும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 134 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்