இலங்கை செய்திகள்

நெல் கொள்வனவை துரிதப்படுத்தக்கோரி கவனயீர்ப்பு பேராட்டம்

15 Feb 2017

நெல் கொள்வனவை துரிதப்படுத்தக்கோரி கவனயீர்ப்பு பேராட்டமொன்று  ஓட்டமாவடி விவசாய எல்லைக்குப்பட்ட விவசாய அமைப்புக்களினால் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பித்து கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம் வரை உழவு இயந்திரத்தில் நெல் மூட்டைகளை ஏற்றியவாறு பேரணியாக விவசாயிகள் சென்றனர்.

குறித்த பேரணியில் 20க்கு மேற்ப்பட்ட விவசாய அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கல்குடா தொகுதியில் வெளி மாவட்ட நெற் கொள்வனவு வியாபாரங்களை நேரடியாக விவசாயிகளிடம் கொள்வனவு செய்ய இடமளியுங்கள், ஏழை விவசாயிகளின் வயிற்றில் மில் உரிமையாளர்கள் குளிர்காய நினைக்காதீர்கள், வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குங்கள், ஏழை விவசாயிகளின் விளை பொருட்களுக்கு போதிய விலை கொடுங்கள், விவசாயிகள் நல்லாட்சியில் வாழ்வதா அல்லது செத்து மடிவதா, விவசாயிகளை ஏமாற்றாதே விவசாயிகளை ஏமாற்றாதே போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணி பிரதேச செயலகம் வரைச் சென்றதும் பிரதேச செயலாளர் எம்.எம்.நபௌபரிடம் விவசாயிகளின் கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டதும், குறித்த விவசாயிகளின் கோரிக்கை அடங்கிய மகஜரை உடனடியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் உரிய அதிகாரிகளுக்கும் அனுப்பி வைப்பதுடன் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்லதொரு முடிவுக்காகபாடுபடுவேன் எனவும் இதன்போது பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்