இந்தியா செய்திகள்

நீட் தேர்வில் தவறான மொழிபெயர்ப்புக்கு 196 மதிப்பெண் வழங்க உத்தரவு

11 Jul 2018

நீட் தேர்வில் தவறான மொழிபெயர்ப்பால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதால் தமிழில் தேர்வு எழுதிய அனைவருக்கும் எம்பிபிஎஸ் சீட் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு மே 6ம் தேதி நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத தமிழகத்தில் 1,07,288 பேர் உள்பட நாடு முழுவதும் 13,26,725 பேர் எழுதினர். இதில் தமிழில் 24,072 பேர் நீட் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாளில் 49 கேள்விகள் தமிழில் சரிவர மொழிபெயர்க்கப்படவில்லை, வேறு மாநிலங்களில் இடம் ஒதுக்கீடு செய்தது, கடும் கட்டுப்பாடுகளை பின்பற்றியது என தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு இது கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது.

சரியான மொழிபெயர்ப்பு இல்லாத நிலையில் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்னையால் கருணை மதிப்பெண் வழங்கக்கோரி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் 196 மதிப்பெண் வழங்குமாறு தீர்ப்பு வழங்கியதோடு, 2 வாரத்தில் புதிய தரவரிசைப்பட்டியல் வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் குளறுபடிகள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில் ஜூன் 5ம் தேதி நீட் தேர்வு முடிவை வெளியிட திட்டமிட்டிருந்த சிபிஎஸ்இ நிர்வாகம் ஒரு நாள் முன்னதாக ஜூன் 4ம் தேதி நீட் தேர்வு முடிவை அவசர அவசரமாக வெளியிட்டது. தமிழகத்தில் 45,975 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நீட் ஜூலை 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடந்தது. எல்லா மாநிலங்களிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதனால் தரவரிசைப்பட்டியல் மாறினால் எல்லா மாநிலங்கள், அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கை மீண்டும் நடத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. 2 வாரத்தில் புதிய தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டால், தமிழில் தேர்வு எழுதிய பல மாணவர்களுக்கு டாக்டர் சீட் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுெதாடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்