இந்தியா செய்திகள்

நிர்வாணமாக்கி ஜூனியர் மாணவரை வீடியோ எடுத்த மாணவர்கள் கைது

13 Jun 2018

கொல்கத்தாவில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் மிஷன் கல்லூரியில் கடந்த மே 17 நிதி திரட்டும் நிகழ்வின் செலவினங்களைப் பற்றி ஜூனியர் மாணவர் ஒருவர் கேட்ட போது சீனியர் மாணவர்கள் அவரை தாக்கி அவரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து உள்ளனர். இந்த வீடியோ  சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகியது.

இது குறித்து செயின்ட் பால் முன்னாள் மாணவர்கள்  இது குறித்து  நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து அம்ஹெர்ஸ்ட்  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சீனியர் மாணவர்கள்   அர்னாப் கோஷ், மற்றும் அவிஜித் துலாய், கிளார்க் ஆனந்தா பிரமானிக், மற்றும் டிஎம்சி தலைவர்கள் அப்துல்கயும் மோலா மற்றும் ஷேக் இனாமுல் ஹக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து உள்ளது.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்