விளையாட்டு செய்திகள்

நிர்வாக பொறுப்பில் இருந்து விலகினார், லலித்மோடி

13 Aug 2017

ஐ.பி.எல். சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட லலித்மோடி மீது நிதி முறைகேடு மற்றும் அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் லலித் மோடி இங்கிலாந்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார்.

நாக்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த லலித்மோடி ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் ஐ.பி.எல். போட்டியை ஜெய்ப்பூரில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்கவில்லை. அத்துடன் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கான நிதி உதவியும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாக பொறுப்புகள் எல்லாவற்றில் இருந்து விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தை இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இது தொடர்பாக லலித்மோடி தனது டுவிட்டர் பதிவில், ‘அடுத்த தலைமுறைக்கு கிரிக்கெட் நிர்வாகத்தை அளிக்க இது சரியான தருணமாக கருதுகிறேன். எனவே இந்திய கிரிக்கெட் நிர்வாக பொறுப்புகள் அனைத்தில் இருந்தும் விடைபெறுகிறேன். உறுதி அளித்தபடி ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவில் நிதி உதவி அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV