கனடா செய்திகள்

நியூ புறுன்ஸ்விக் மாகாணத்தில் புதிய குடிவரவாளர்களுக்கு வேலைவாய்ப்பு

08 Nov 2018

நியூ புறுன்ஸ்விக் மாகாணத்தின் மிகப்பெரிய நிறுவனங்களுடனான நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகள் பற்றிய கண்காட்சி தலைநகர் சென்ற் ஜானில் புதன்கிழமை நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் சுமார் 45 வெவ்வேறு நிறுவனங்களின் பங்குபற்றலில் 500 வேலைவாய்ப்புகள் நியமனங்கள்  உள்ளடங்கியிருந்தது.

 

நியூபுறுன்ஸ்விக் சமூக பொருளாதார நிர்வாக அமைச்சர் இந் நிகழ்வு பற்றி கூறுகையில் புதிதாக கனடாவிற்கு குடியேறுபவர்களுக்கு அவர்களின் தகுதிக்கு எற்ப யார் யாருக்கு என்ன வேலை தேவை என்பதை கண்டுபிடிக்கவும் அவர்களே தங்களை தாங்களே இனம் காணவும் இந்த நிகழ்வு பெரிதும் உதவுவதாக தெரிவித்தார்.


இன் நிகழ்வில் பெருமளவான புதிய குடிவரவாளர்கள் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்