14 May 2022
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த தகவலை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
அவருக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் லேசாக இருப்பதாகவும், மேலும் அவர் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.