இந்தியா செய்திகள்

நிதிஷ்குமார் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்

12 Jan 2018

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் புக்சர் மாவட்டத்தில் உள்ள நந்தார் கிராமத்தில் நடைபெற்ற சமிக்சா யாத்ரா என்ற விழாவில் பங்கேற்க சென்றார். அப்போது அவரது பாதுகாப்பு வாகனத்தின் மீது மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் முதல்-மந்திரி பாதுகாப்பு வாகனம் சேதம் அடைந்தது. பாதுகாப்பு அதிகாரி 2 பேர் காயம் அடைந்தனர்.

முதல்-மந்திரி நிதிஷ்குமார் அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.  இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முதல்-மந்திரி பாதுகாப்பு வாகனம் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV