19 Sep 2023
நிட்டம்புவ நகரில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் (ATM) ஒன்று உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
நேற்றிரவு குறித்த இயந்திரம் உடைக்கப்பட்டு அதிலிருந்த 7,851,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அருகிலிருந்த சீசீரிவி கெமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருதாகவும் நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.