இந்தியா செய்திகள்

நாளை பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

16 Jul 2017

குடியரசுத்துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க நாளை பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டம் நாளை மாலை நடைபெறும் என்று கட்சியின் நாடாளுமன்றக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள இத்தேர்தலில் 18 எதிர்க்கட்சிகளின் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். அவர் வரும் 18 ஆம் தேதி (செவ்வாய்) அன்று வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே வேட்பு மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாளாகும்.

இத்தேர்தலில் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த இரு அவைகளின் மொத்த உறுப்பினர்களான 790 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாவர்.

இன்றைய நிலையில் ஆளுங்கட்சியான பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பக்கமே பெரும்பான்மையுள்ளது. தங்களுக்கு சாதகமாக 500 முதல் 550 வாக்குகள் வரைக் கிடைக்கும் என்று பாஜக கட்சி வட்டாரங்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV