இலங்கை செய்திகள்

நான் கஞ்சா செடியை வளா்க்கவில்லை. அது தானாகவே வளா்ந்தது -- நபர் நீதிமன்றில் கூறியுள்ளார்

12 Feb 2019

நான் கஞ்சா செடியை வளா்க்கவில்லை. அது தானாகவே வளா்ந்தது. பூ செடி என நினைத்து அழிக்காமல் விட்டுவிட்டேன். என கஞ்சா செடி வளா்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபா் நீதிமன்றில் கூறியுள்ளாா்.

யாழ்ப்பாணம்  நாவற்­கு­ழி­யில் கட்­ட­டம் அமைக்­கும் இடத்­தில் கஞ்சா செடி வளர்த்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் கைது செய்யப்பட்­ட­வர் ஒரு லட்­சம் ரூபா பிணை யில் விடு­விக்­கப்­பட்டு வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

தென்­னி­லங்கை தெல்­தெ­னி­ய­வைச் சேர்ந்த அவர், கட்­ட­டம் அமைக்­கும் வேலை­யில் ஈடு­ப­டு­ப­வர்.தமக்­குக் கிடைத்த தக­வ­லை­ய­டுத்து நேற்­று­முன்­தி­னம் அங்கு சென்று அவ­ரைக் கைது செய்­தி­ருந்­தோம் என்று சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் தெரி­வித்­தி­ருந்­த­னர். 

வளர்க்­கப்­பட்­டு­வந்த கஞ்­சாச் செடி பொலி­ஸா­ரால் மீட்­கப்­பட்­டது.சந்­தே­க­ந­ப­ரைப் பொலி ஸார் சாவ­கச்­சேரி நீதி­மன்றில் நேற்று முற்­ப­டுத்­தி­னர். அதன்­போதே பிணையில் விடு­விக்­கப்­பட்­டார். 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்