இலங்கை செய்திகள்

நாட்டை முன்னேற்றப் பாதையை நோக்கி கொண்டுச் செல்ல என்னால் முடியும் - சஜித் பிரேமதாஸ

12 Jul 2019

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மக்கள் என்னிடம் ஒப்படைத்தால் இலங்கையை முற்போக்கான நாடாக மாற்றுவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ரத்மலானையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“இலங்கையை பிரகாசமான நாடாக மாற்றுவதற்கு நாம் தயாராகவுள்ளோம். அதற்கு மக்கள்தான் எமக்கு உதவ வேண்டும். மேலும் யார் தவறானவர்கள், சரியானவர்கள் என்பது குறித்து மக்களாகிய நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது, ​​இலங்கை நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறியதால் உலகின் ஏழ்மையான நாடுகளுக்கான உதவி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது பின்னடைவை சந்தித்துள்ள நாட்டை முன்னேற்ற பாதையை நோக்கி கொண்டுச் செல்ல என்னால் முடியும்” என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்