இலங்கை செய்திகள்

நாட்டை பிளவுபடுத்தக் கூடிய ஏற்பாடுகள் புதிய அரசியலமைப்பில் இல்லை - பிரதமர் ரணில்

11 Jan 2019

நாட்டை பிளவுபடுத்துவதற்கோ அல்லது பௌத்த மதத்திற்கு உரித்தான பிரதான இடத்தை இல்லாமல் ஆக்குவதற்கான ஏற்பாடுகளோ புதிய அரசியல் அமைப்பில் எந்தவொரு இடத்திலும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு நிர்ணய சபை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை  காலை 10 மணிக்கு கூடியது. இதன்போது அங்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் ஒற்றையாட்சியை, பாதுகாப்பதற்கு அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே நாட்டிற்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது, தேர்தல்முறை, நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறையை நீக்குதல் போன்றன தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பௌத்த மதத்திற்கான பிரதான இடத்தை நீக்குவதற்கு எந்தவித யோசனைகளும் இல்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பௌத்த  மதத்திற்கான பிரதான இடத்தை நீக்குவதற்கு புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிலர் முன்வைக்கும் கருத்தில் உண்மை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்