இலங்கை செய்திகள்

நாட்டின் பாதுகாப்பு நிலைமை வழமைக்குத் திரும்பவில்லை - சரத் பொன்சேகா

11 Jun 2019

நாட்டின் பாதுகாப்பு நிலைமை தற்போது வரையில் வழமைக்குத் திரும்பவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

சரியான முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினாலேயே பாரியளவான உயிர்ச் சேதம் ஏற்பட்டதாகவும் இதற்கு ஜனாதிபதி மற்றும் ஏனைய அரச தரப்பினர்கள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் சிலர் கூறுவது போன்று தீவிரவாதத்தை சில நாட்களில் ஒழிக்க முடியாது எனவும் அவ்வாறு யாராவது தெரிவிப்பாராயின் அவர் முட்டாள் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்