இலங்கை செய்திகள்

நாட்டின் தலைமை பதவிக்கு கரு ஜயசூரிய தகுதியானவர் - ஜோன் அமரதுங்க 

12 Jul 2019

சபாநாயகர் கரு ஜயசூரிய எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்கக்கூடியவர் என்பதால் அவர் நாட்டின் தலைமை பதவிக்கும் தகுதியானவர் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலா திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஜோன் அமரதுங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய சிறிதும் அச்சமற்ற நபர் என்றும் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்