உலகம் செய்திகள்

நாடு முழுவதும் 76 கோடியை நெருங்கிய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை

15 Sep 2021

நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  கடந்த ஜூனில் இருந்து 18 வயது கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பெரிய அளவில் நடந்து வருகின்றன.


இந்த நிலையில், மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, நேற்று ஒரே நாளில் 54 லட்சத்து 72 ஆயிரத்து 356 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.  நள்ளிரவு வெளியாகும் இறுதி அறிக்கையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

இதுவரை, 57 கோடியே 41 லட்சத்து 31 ஆயிரத்து 961 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.  18 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 370 பேர் இரண்டு டோசும் போட்டு கொண்டுள்ளனர். இதனால், நாடு முழுவதும் போடப்பட்டு உள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 75.81 கோடியை கடந்து 76 கோடியை நெருங்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam