இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் இன்றிரவும் ஊரடங்கு!

14 May 2019

நாடு முழுவதும் இன்றிரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆனால், கம்பஹா மாவட்டத்தில் இன்றிரவு 7 மணியிலிருந்து நாளை காலை 6 மணிவரையும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வடமேல் மாகாணத்தில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.

வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதை அடுத்து வடமேல் மாகாணம் முழுதும் நேற்று மாலை முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று மாலை 4 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது. எனினும், இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் மீண்டும் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்