இலங்கை செய்திகள்

நாடாளுமன்றைக் கலைத்து தேர்தலை நடத்துமாறு மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை

12 Feb 2018

தாங்களே உண்மையான எதிர்க்கட்சி என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கி, நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து, நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு ​ கோரிக்கை விடுத்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்